2 நாள் வீழ்ச்சிக்குப் பிறகு பங்குச்சந்தை ஏற்றம்! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! காரணம்?
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 2 நாள்கள் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று (அக். 9, வெள்ளிக்கிழமை) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,776.67 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.10 மணியளவில் சென்செக்ஸ் 762.28 புள்ளிகள் உயர்ந்து 72,355.52 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 250.75 புள்ளிகள் உயர்ந்து 22,482.55 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி50 குறியீட்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அப்போலோ மருத்துவமனை, மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.54 சதவீதம், 0.17 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாக, நிஃப்டி ஐடி, எஃப்எம்சிஜி பங்குகள் கணிசமாக உயர்ந்தன. அதேநேரத்தில் உலோகம், பார்மா பங்குகள் சரிந்தன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் ரிலையன்ஸ், பெல், ஐசிஐசிஐ வங்கி தவிர மற்ற நிறுவனங்கள் சரிந்து வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வர்த்தக தொடக்கதில் 96.65 ஆக உள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 103.20 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது உடனடித் தாக்குதல்களை நடத்த வாய்ப்பில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி பங்குகள் உயர்வு, நேற்றைய வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை வாங்குவது ஆகியவற்றால் பங்குச்சந்தைகள் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.
Stock Market LIVE: Sensex at day's high, surges 700 pts, Nifty near 22,500;
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.