FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

11 வினாடிகள் முன்பு
பங்குச்சந்தை(கோப்புப்படம்)
பகிர்:

வாரத்தின் தொடக்க நாளான இன்று (நவ. 16) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,810.98 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 450.37 (0.55%) புள்ளிகள் உயர்ந்து 82,042.82 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114.85 (0.46%) புள்ளிகள் உயர்ந்து 25,259.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்ததால், நிஃப்டி50 மற்றும் சென்செக்ஸ் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

நிஃப்டி50 குறியீட்டில் ஈச்சர் மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக இருந்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் முறையே 0.56 சதவீதம் மற்றும் 0.92 சதவீதம் சரிந்தது.

துறை வாரியாக, நிஃப்டி எஃப்எம்சிஜி அதிகபட்சமாக உயர்ந்தது, அதே நேரத்தில் நிஃப்டி ரியல் எஸ்டேட் மற்றும் நிஃப்டி மெட்டல் ஆகியவை அதிகபட்சமாக சரிந்தன.

summary

Stock Market: Sensex stuck in range, up 300pts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.