பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் லாபம்!
பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக். 21) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,337.93 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 424.05 புள்ளிகள் உயர்ந்து 74,259.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.35 புள்ளிகள் குறைந்து 22,983.30 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப் 0.82 சதவீதம், நிஃப்டி ஸ்மால்கேப் 1.35 சதவீதம் சரிந்தது.
துறைவாரியாக, நிஃப்டி ஐடி அதிகபட்சமாக உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி வங்கி, ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் சரிந்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் 18 பங்குகள் உயர்ந்தும் 12 நிறுவனப் பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.
வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.62 ஆக உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 110.10 டாலராக உயர்ந்துள்ளது.
Stock Market: Nifty at 22,950, Sensex up 350 pts; Infosys, TCS, UltraTech Cement top gainers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.