FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பங்குச்சந்தை ஏற்றம்! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு; ஐடி, மீடியா பங்குகள் மட்டும் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

23 செப்டம்பர் 2026, 11:19 am IST
பங்குச்சந்தை - IANS
பகிர்:

வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்த நிலையில் நேற்று (செப். 22) சரிவுடன் முடிந்தன. தொடர்ந்து இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,648.32 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 320.77 புள்ளிகள் சரிந்து 74,849.84 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97.65 புள்ளிகள் சரிந்து 23,426.65 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50 குறியீட்டில் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.29 சதவீதம் மற்றும் 0.52 சதவீதம் உயர்ந்தன.

30 சென்செக்ஸ் பங்குகளில், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட், லார்சன் & டூப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் அதிக லாபம் பெற்றன.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா அதிகமாகநஷ்டமடைந்தன.

துறைவாரியாக, நிஃப்டி உலோகப் பங்குகள் அதிக லாபம் பெற்றன. நிஃப்டி ஐடி, மீடியா பங்குகள் மட்டும் சரிந்தன. மற்ற துறை பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வர்த்தக தொடக்கதில் 95.56 என இருந்தது.

கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் நேர்மறையில் வர்த்தகம் ஆவதாகக் கூறப்படுகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 98.29 டாலராக உள்ளது.

summary

Stock Market Today: Nifty at 23,400, Sensex jumps 300 pts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments