மீளுமா பங்குச்சந்தை? சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் கடும் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
இந்திய பங்குச்சந்தைகள் இந்த வார தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் கடந்த இரு நாள்கள் சற்று உயர்வுடன் முடிந்தன.
தொடர்ந்து இன்று (செப். 18), ஏற்ற, இறக்கத்தில் மாறி மாறி வர்த்தகமாகின்றன. எனினும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பங்குச்சந்தைகள் மீண்டு வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,575.24 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 105.93 புள்ளிகள் உயர்ந்து 74,420.52 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 23,301.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் எடர்னல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் பங்குகள் முறையே 0.52 சதவீதம், 0.86 சதவீதம் உயர்ந்தன.
துறை வாரியாக, நிஃப்டி உலோகம், ரியல் எஸ்டேட் பங்குகள் அதிக லாபம் பெற்று வருகின்றன. அதே நேரத்தில் நிஃப்டி ஐடி பங்குகள் கணிசமாக சரிந்தது.
Stock Market Today: BSE Sensex gained 105 pts, Nifty climbs back above 23,300 again
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.