FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போர் நிறுத்தம்: பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம்; சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - ANI
பகிர்:

ஈரான் உடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் இன்று (நவ. 11) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மேலும் வெளிநாட்டினர் அதிகம் பங்குகளை வாங்கி வருவதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாலும் ( 89.16 டாலர்) பங்குச்சந்தை வர்த்தகம் லாபத்துடன் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேலும் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

சென்செக்ஸ் இன்று காலை 82,248.68 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 1,135.10 (1.40%) புள்ளிகள் உயர்ந்து 82,241.75 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293.30 (1.17%) புள்ளிகள் உயர்ந்து 25,337.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக இருந்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் முறையே 0.68 சதவீதம் மற்றும் 1.32 சதவீதம் உயர்ந்தன.

துறைவாரியாக, நிஃப்டி பொத்துறை வங்கி குறியீடு அதிகபட்சமாக உயர்ந்தது, அதே நேரத்தில் நிஃப்டி பார்மா குறியீடு அதிகபட்சமாக சரிந்தது.

Bulls in action: Sensex zooms 1,300 pts intraday; oil, FII buying aid rally

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.