Reliance Infrastructure Ltd கோப்புப் படம்
வணிகம்

தாமோதர் வேலி கார்ப். நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா வெற்றி!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாமோதர் வேலி கார்ப்பரேஷனுடன் ஏற்பட்ட மோதலில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ஆதரவான தீர்ப்பை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரூ.780 கோடி உறுதி செய்துள்ளது.

DIN

மேற்கு வங்கத்தைச் தளமாகக் கொண்ட தாமோதர் வேலி கார்ப்பரேஷனுடன் ஏற்பட்ட மோதலில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ஆதரவான ரூ.780 கோடி தீர்ப்பை கொல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று அனில் அம்பானி குழும நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேற்கு வங்கத்தின் புருலியாவில் மாவட்டத்திலுள்ள உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக 1,200 மெகாவாட் அனல் மின் நிலையத்தை ரூ.3,750 கோடிக்கு அமைப்பதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியது.

சர்ச்சைகள் மற்றும் பிற காரணங்களால் இந்த திட்டம் தாமதமான நிலையில், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து தாமோதர் வேலி கார்ப்பரேஷன் இழப்பீடு கோரியது.

இருப்பினும் பல சுற்றுச் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனமானது இதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. 2019ல் நடுவர் தீர்ப்பாயம் ரிலையன்ஸ் இன்ஃப்ராவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, இன்று வரை திரட்டப்பட்ட வட்டியுடன் ரூ.896 கோடியை செலுத்துமாறு தாமோதர் வேலி கார்ப்பரேஷனுக்கு உத்தரவிட்டது.

நடுவர் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் மேல்முறையீடு செய்த நிலையில் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT