PTI 
வணிகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து முடிவு!

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.83.75-ஆக உள்ளது.

DIN

மும்பை: அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.83.75-ஆக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கத்தை தொடர்ந்து, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் ஆரம்ப நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து தொடங்கியது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகராக இந்திய ரூ.83.72 ஆக வர்த்தகம் தொடங்கிய நிலையில், இறுதியாக ரூ.83.75 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 6 காசுகள் சரிந்துள்ளது.

அதே போல் கடந்த வராம் வெள்ளிக்கிழமையன்று வர்த்தக நேர முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.83.69-ஆக முடிந்தது.

ஆகஸ்ட் மாதத்திற்கான அமெரிக்க முக்கிய தனிநபர் நுகர்வு செலவுகள் விலைக் குறியீடு பட்டியல், சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்ததால் டாலர் வலுவடைந்தது. இது பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.71 சதவிகிதம் உயர்ந்து $72.49-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT