முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 91.70ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 91.70 ஆக முடிவடைந்தன.

Updated On : 6 மார்ச், 2026 at 1:32 PM
பகிர்:

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், நாள் முழுவதும் ரூபாயின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட வரம்பில் வர்த்தகமானது. ரிசர்வ் வங்கியின் தலையீட்டின் கீழ், வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 91.70 ஆக முடிவடைந்தன.

உள்நாட்டு பங்குகளில் ஏற்பட்ட அதித விற்பனை மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறி வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை எதிர் நோக்கி சென்றதாக அந்நிய செலாவணி நிபுணர்களின் தெரிவித்தனர்.

இருப்பினும், மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரின் மத்தியில் உலகளாவிய எரிசக்தி ஓட்டத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் 30 நாட்களுக்கு ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் முடிவைத் தொடர்ந்து ரூபாயின் சரிவு சற்றே குறைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், வர்த்தக அமர்வின் இறுதியில் இந்திய ரூபாய் ரூ. 91.64 ஆக நிலையாக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது அதிகபட்சமாக ரூ. 91.54 க்கும் குறைந்தபட்சமாக ரூ. 91.78 க்கும் இடையில் குறுகிய வரம்பில் வர்த்தகம் நடைபெற்றது. இறுதியில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முந்தைய வர்த்தக நிலையிலிருந்து 6 காசுகள் குறைந்து ரூ. 91.70 ஆக நிலைபெற்றது.

முந்தைய இரண்டு வர்த்தக அமர்வுகளில் 97 காசுகள் இழந்த இந்திய ரூபாய், நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகராக 41 காசுகள் மீண்டு ரூ. 91.64ஆக இருந்தது.

summary

The rupee stayed range-bound throughout the session on Friday and ended 6 paise lower at 91.70 against the US dollar.

முழு கட்டுரையைப் படிக்க →