ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ.92.68ஆக நிறைவடைந்தன.
மும்பை: உலகளாவிய பதற்றங்கள், குறிப்பாக அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் குறித்த அச்சத்தால், இன்றையை வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தனது தொடக்க பொழிவை இழந்து, 17 காசுகள் சரிந்து ரூ.92.68ஆக நிறைவடைந்தன.
அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், வங்கிகள் தங்கள் வர்த்தக நிலைகளை 100 மில்லியன் டாலர்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கான காலக்கெடு இன்று முடிவடைவதால், ரூபாயின் மதிப்பில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.58 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு சரிந்து, வர்த்தக நேரத்தின் இடையே ரூ.92.76 என்ற குறைந்தபட்ச நிலையைும் ரூ.92.41 என்ற அதிகபட்ச நிலையை எட்டியது. பிறகு அதன் முந்தைய நாள் நிறைவு நிலையிலிருந்து 17 காசுகள் சரிந்து ரூ.92.68ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் என்று சற்று உயர்ந்து ரூ.92.51 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தன.
The rupee pared initial gains and settled for the day 17 paise lower at 92.68 against the US dollar on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.