ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.65! 15 காசுகள் சரிவு!!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்தகத்தில் 15 காசுகள் சரிந்து ரூ. 94.65 என்ற நிலையில் நிலைபெற்றது.
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்தகத்தில் 15 காசுகள் சரிந்து ரூ. 94.65 என்ற நிலையில் நிலைபெற்றது.
மாத இறுதியில் நிறுவனங்களிடமிருந்து எழுந்த இறக்குமதித் தேவை மற்றும் முதலீட்டாளர்களிடையே நீடித்த எச்சரிக்கை போக்கு ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.58 வரை சரிந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலவிய ஸ்திரத்தன்மை மற்றும் ரிசர்வ் வங்கியின் தலையீடு குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை ரூபாய் மதிப்புக்கு ஆதரவளித்து அதன் சரிவைக் கட்டுப்படுத்தியது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.60 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு வர்த்தக முடிவில் அதன் நேற்றைய நிறைவு விலையிலிருந்து 15 காசுகள் சரிந்து ரூ. 94.65 ஆக நிறைவடைந்தது.
இதற்கு முன்னதாக, நேற்று இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 94.51 ஆக இருந்தது.
The rupee depreciated by 15 paise to close at 94.65 against the US dollar on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.