டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிறைவு.
மும்பை: வலுவான டாலர் மற்றும் பலவீனமான உள்நாட்டுப் பங்குச் சந்தையால், இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிலைபெற்றது.
டாலர் வலுப்பெற்று வருவதால், அந்நிய முதலீடு வெளியேறும் என்ற அச்சமும், அதிகரித்து வரும் அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பும், இந்திய ரூபாயை அழுத்தத்தில் வைத்திருந்தது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ. 94.07 ஆக வர்த்தகத்தை தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ. 94.05 சென்ற நிலையில் குறைந்தபட்சமாக ரூ. 94.28 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், நேற்றைய வர்த்தக நாள் முடிவிலிருந்து 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிலைபெற்றது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ. 94.12 ஆக நிறைவடைந்தது.