வணிகம்

பரோடா வங்கி கடனளிப்பில் 13% வளா்ச்சி

கடந்த மாா்ச் 12.8 சதவீத கடனளிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.

DIN

கடந்த மாா்ச் 12.8 சதவீத கடனளிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.12.3 லட்சம் கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.10.9 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் கடனளிப்பு சுமாா் 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்புத் தொகை இருப்பு 10.25 சதவீதம் அதிகரித்து ரூ.14.7 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின இதே காலாண்டில் அது ரூ.13.35 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT