வணிகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77 ஆக முடிவு!

பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77ஆக முடிந்தது.

DIN

மும்பை: பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77ஆக முடிந்தது.

உலகளாவிய கச்சா விலை சரிவு, சாதகமான உள்நாட்டு பணவீக்கம் மற்றும் ஜூலை 9ஆம் தேதி வரையான இந்தியா மீதான கூடுதல் கட்டணங்களை நிறுத்தி வைக்க அமெரிக்க நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கை ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்பை ஆதகரித்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.85 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.59 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.85 ஐ தொட்ட நிலையில், முடிவில் 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77 ஆக முடிந்தது.

இந்திய ரூபாய் வெள்ளிக்கிழமை அன்று 58 காசுகள் அதிகரித்து ரூ.86.10 ஆக இருந்தது.

இதையும் படிக்க: மின்னணு சாதனங்கள் மீதான கட்டணத்தை டிரம்ப் தளர்த்தியதையடுத்து சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT