ரெட்மி ஏ5 / Redmi A5 Redmi
வணிகம்

பட்ஜெட் விலையில் வெளியான புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் நேற்று வெளியானது.

DIN

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷியோமி பட்ஜெட் விலையில் புதிய தொழில்நுட்பங்களுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் ஒன்றை நேற்று (ஏப். 15) இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரெட்மி ஏ5 (Redmi A5) ஸ்மார்ட்போன் 6.68 இன்ச் தொடுதிரையுடன் 193 கிராம் எடையும் 171.71 மிமீ உயரமும் கொண்டுள்ளது.

இதில், 32 மெகாபிக்ஸல் அளவில் இரு ஏஐ பின்பக்க கேமராக்கள் மற்றும் 8 மெகாபிக்ஸல் அளவில் முன்பக்க கேமரா உள்ளது. மேலும், புகைப்படங்களுக்கு மிகச்சிறந்த தரத்தை வழங்கும் விதமாக தனி ஃபில்டர்கள் (Filters) வழங்கப்பட்டுள்ளன. இதில், விடியோக்களை 1080p தரத்தில் எடுக்கலாம்.

பாதுகாப்பு அம்சங்களாக சைட் ஃபிங்கர்ப்ரிண்ட் அன்லாக் ( Side-mounted fingerprint unlock) வசதியும் ஏஐ ஃபேஸ் அன்லாக் (AI face unlock) வசதியும் வழங்கப்பட்டுள்ளன.

5ஜி, 4ஜி என இரு இணையவேக வசதியையும் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் 15 இயங்குதளத்துடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இரு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் (Software update), 4 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு இணைப்புகள் (Security patches) வழங்கப்படும்.

ஆக்டாகோர் ப்ராசெஸ்ஸர் (Octa core processor) உடன் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2 டிபி (2 TB) வரை சேமிப்பை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதன் பேட்டரி திறன் 5,200 mAh. குறைந்த விலையில் அதிக பேட்டரி திறன் கொண்ட இந்த ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் இரு வகைமைகளில் வெளியாகியுள்ளது.

விலை எவ்வளவு?

1. 3ஜிபி + 64ஜிபி (3GB RAM + 64GB storage) சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ. 6,499.

2. 4ஜிபி + 128ஜிபி (4GB RAM + 128GB storage) சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ. 7,499.

இந்த ஸ்மார்ட்போன் ஜெய்சல்மார் கோல்டு, ஜஸ்ட் பிளாக், பாண்டிச்சேரி ப்ளூ என்ற மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை எம்ஐ இணையதளம், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்கள் மற்றும் நேரடி விற்பனையகங்களில் வாங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT