ஐடி நிறுவனமான விப்ரோ தனது 4-வது காலாண்டு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஐடி நிறுவனமான விப்ரோ, அதன் காலாண்டு நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 26% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.3,570 கோடியாக உள்ளது. இருப்பினும் இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 1% க்கும் சற்று அதிகமாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் வருவாய் காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில் 1.2% மற்றும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2.3% குறைந்துள்ளது. அதன் 4வது காலாண்டுக்கான செயல்பாடு வரம்பு, காலாண்டுக்குக் காலாண்டு 17.5% ஆக இருந்தது.
நிறுவனமானது அதன் ஒப்பந்த முன்பதிவுகளில் வலுவான வளர்ச்சியைக் பதிவு செய்து நிலையில், இது $1,763 மில்லியனாக உள்ளதாக தெரிவித்தது.
நிறுவனத்தின் முடிவுகள் பிற்பகல் 3:30 மணிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.