கேட்ஜெட்ஸ், ஸ்மார்ட்போன்ஸ் பயன்படுத்துவோர் சந்திக்கும் சவால்களில் முக்கியமான ஒன்று பேட்டரி திறன். ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதிக பேட்டரி திறன் கொண்ட போன்களை பயனாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அந்த வகையில், இந்தியாவில் வெளியான ஸ்மார்ட்போன்களிலேயே அதிக பேட்டரி திறன் கொண்ட போன்களை விவோ, ஐக்யூ ஆகிய நிறுவனங்கள் வெளியிடுகின்றனர்.
ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G)
அதிக பேட்டரி திறன் கொண்ட மாடல் என்பதால் ஐக்யூ நிறுவனத்திடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இரு வகைமைகளில் வெளியாகியுள்ளது.
இதன் பேட்டரி திறன் 7,300 mAh ஆகும். 6.77 இன்ச் அளவுள்ள வளைந்த அமோல்ட் டிஸ்ப்ளே (Quad curved AMOLED display) அமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) இயங்குதளத்துடன் உள்ளது.
பின்பக்கத்தில் உள்ள 2 கேமராக்கள் 50 + 2 மெகாபிக்ஸல், முன்பக்கம் 32 மெகாபிக்ஸல் அளவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
8GB RAM + 128GB சேமிப்புத் திறன், 8GB RAM + 256GB சேமிப்புத் திறன், 12GB RAM + 256GB சேமிப்புத் திறன் ஆகிய மூன்று மாடல்களின் விலை ரூ. 19,999 முதல் விற்கப்படுகின்றது.
இதே பேட்டரி திறன் கொண்ட விவோ மாடலுக்கு முன்னதாக நேற்று (ஏப். 16) அன்று வெளியாகி விற்றுத் தீர்ந்த இந்த ஸ்மார்ட்போன் மீண்டும் ஏப். 23 அன்று விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
விவோ டி4 5ஜி (Vivo T4 5G)
விவோ நிறுவனத்தின் டி3 5ஜி (Vivo T3 5G) மாடலின் தொடர்ச்சியாக இந்த மாடல் வெளியாகிறது.
7,300 mAh (90W ஃபாஸ்ட் சார்ஜிங்) திறன் கொண்ட பேட்டரி இதன் முக்கிய சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மாடல் 6.67 இன்ச் முழு ஹெச்டி + வளைந்த எல்இடி அமோல்ட் டிஸ்ப்ளே (Full HD + LED Quad curved display) பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 (Snapdragon 7s Gen 3) இயங்குதளம் மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டை வழங்குகிறது. ஆண்ட்ராய்ட் 15 இயங்குதளத்துடன் 5000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
மூன்று வகைமைகளில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன் எமரால்ட் பிளேஸ், பாண்டோம் கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
8GB RAM + 128GB சேமிப்புத் திறன், 8GB RAM + 256GB சேமிப்புத் திறன், 12GB RAM + 256GB சேமிப்புத் திறன் ஆகிய மூன்று மாடல்களின் விலை ரூ. 22,000 முதல் ரூ. 25,000 வரை விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமராக்கள் 64 + 8 + 2 மெகாபிக்ஸல் அளவுடனும், முன்பக்க கேமரா 16 மெகாபிஸல் அளவுடனும் கொடுக்கப்பட்டுள்ளது.
வருகிற ஏப். 22 அன்று இந்த ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாக விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.