முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கா்நாடகத்தில் மேலும் ஒரு புதிய கிளையைத் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கா்நாடக மாநிலம், தும்கூரில் பிரதான வீட்டு நிதிப் பிரிவில் ஒரு புதிய கிளையை நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஏப். 18) திறந்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தனது இருப்பை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, கா்நாடகத்தின் பெலகாவியில் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கிளையைத் திறந்தது.
ஏற்கெனவே, மைசூா், மங்களூா் மற்றும் ஹூப்ளி போன்ற மாநிலத்தின் இரண்டாம் நிலை இடங்கள் உட்பட 18 கிளைகளைக் கொண்ட இந்நிறுவனம், இந்த ஆண்டு மாநிலத்தின் மூன்றாம் நிலை நகரங்களில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.