அனந்த் ராஜ் 4-வது காலாண்டு நிகர லாபம் 51% அதிகரிப்பு!
ஆனந்த் ராஜ் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆனந்த் ராஜ் லிமிடெட், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.78.33 கோடியாக இருந்தது.
2024-25 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் அதன் மொத்த வருமானம் ரூ.550.90 கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இது அதன் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.453.12 கோடியாக இருந்தது. அதே வேளையில், கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.260.91 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.425.54 கோடியானது.
2024-25 ஆம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.2,100.28 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.1,520.74 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டாடா கம்யூனிகேஷன்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.