வணிகம்

ஓரியண்டல் ஹோட்டல் 4-வது காலாண்டு லாபம் ரூ.17.69 கோடி!

தி இந்தியன் ஹோட்டல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓரியண்டல் ஹோட்டல் 2025 ஜனவரி - மார்ச் வரையான காலாண்டில் அதன் லாபம் ரூ.17.69 கோடி ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தி இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓரியண்டல் ஹோட்டல் லிமிடெட் 2025 ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் அதன் லாபம் ரூ.17.69 கோடி ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனமானது ரூ.16.33 கோடி லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த ஆண்டில், நிறுவனத்தின் லாபம் முந்தைய ஆண்டில் ரூ.55.34 கோடியுடன் ஒப்பிடும்போது இது ரூ.44.52 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் மொத்த வருமானம் ரூ.110.73 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.133.36 கோடியானது.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், மொத்த வருமானம் ரூ.444.63 கோடியாக உயர்ந்தது. இது அதன் முந்தைய ஆண்டு ரூ.409.01 கோடியாக இருந்தது.

இயக்குநர்கள் குழு பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு 50 காசுகளாக பரிந்துரைத்துள்ளது.

சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், சென்னையில் உள்ள தாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட் மற்றும் ஸ்பா, கொச்சியில் உள்ள தாஜ் மலபார் ரிசார்ட் அண்ட் ஸ்பா, கோயம்புத்தூரில் விவந்தா, மங்களூரில் விவந்தா, கேட்வே மதுரை மற்றும் கேட்வே குன்னூர் உள்ளிட்ட 7 ஹோட்டல்களை இந்த நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

இதையும் படிக்க: டாடா டெக்னாலஜிஸ் 4-வது காலாண்டு நிகர லாபம் 20% அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT