கோப்புப் படம் 
வணிகம்

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டு லாபம் 62 சதவீதம் சரிவு!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 61.58 சதவீதம் சரிந்து ரூ.89.67 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: முன்னணி உபகரண மற்றும் நுகர்வோர் மின்னணு உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், தனது நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 61.58 சதவீதம் சரிந்து ரூ.89.67 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 3வது காலாண்டில் நிறுவனம் ரூ.233.45 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் ரூ.4,114.4 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. இதுவே கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.4,395.53 கோடியாக இருந்தது.

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் மொத்த செலவுகள் நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.4,038.36 கோடியாக இருந்ததாகவும், இது ஆண்டுக்கு ஆண்டு 2.77 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தது.

நிதியாண்டின் 3வது காலாண்டில், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்திய-வின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம், பிற வருமானத்தையும் உள்ளடக்கியதில் இது ரூ.4,190.04 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து, எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா தாக்கல் செய்த 2வது காலாண்டு முடிவுகள் இதுவாகும்.

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.1518.15 ஆக நிலைபெற்றது.

LG Electronics India Ltd, on Wednesday reported a whopping 61.58 per cent year-on-year decline in its net profit to Rs 89.67 crore in the December quarter of FY26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் வழிபாடு

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT