சென்னை: முருகப்பா குழுமத்தின் ஒரு பகுதி மற்றும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தொழில் நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் அதன் காலாண்டு அறிக்கையை இன்று (பிப். 4) வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் 3 வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 278.97 கோடியாக இருப்பதாகவும், கடந்த ஆண்டு, இதே காலாண்டில், இது ரூ. 280.15 கோடியாக இருந்ததாக தெரிவித்தது.
டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்திற்கு பிறகு, வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 884.21 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 896.10 கோடியுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில், மொத்த வருமானம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 4,889.60 கோடியிலிருந்து அதிகரித்து, நிதியாண்டின் அதே காலாண்டில் இது ரூ. 5,906.83 கோடியாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் முதல் டிசம்பர் 2025 வரையான காலகட்டத்தில், மொத்த வருமானம் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 14,527.50 கோடியிலிருந்து தற்போது ரூ. 16,902.81 கோடியாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் பொறியியல் பிரிவில், அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரையான காலாண்டில் அதன் வருவாய் ரூ. 1,438 கோடியாக பதிவு செய்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த ரூ. 1,212 கோடியை ஒப்பிடும் போது இது சற்று அதிகம்.
உலோகப் பொருட்கள் சார்ந்த பிரிவில் இந்தக் காலாண்டில் ரூ. 408 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 400 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
Tube Investments of India Ltd reported a consolidated profit after tax of Rs 278.97 crore for the October-December 2025 quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.