ஜாவா 42 எஃப்ஜே பைக். 
வணிகம்

புதிய அம்சங்களுடன் ஜாவா 42 எஃப்ஜே!

புதிய அம்சங்களுடன் வெளியாகவும் ஜாவா 42 எஃப்ஜே பைக்.

DIN

சமீபத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் எக்ஸாஸ்ட் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது பைக்கில் இருந்த இரு எக்ஸாஸ்ட்களில் ஒன்று நீக்கம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

ஜாவா யெஸ்டி நிறுவனமானது, புதிய 42 எஃப்ஜே நியோ கிளாசிக் பைக்கை கடந்தாண்டு அறிமுகம் செய்தது. முன்னதாக இருபுறமும் இரு எக்ஸாஸ்ட்டுகள் இருக்கும் பைக் சந்தையில் விற்பனையாகின்றன.

தற்போது, இந்த மாடலில் பெரிய மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு எக்ஸாஸ்ட்டை நீக்குவதன் மூலம் பைக்கின் எடையைக் குறைத்தும், எடைக்கு நிகரான திறன் விகித்தை மேம்படுத்தியும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிப்பு செயல்படும் விதத்திலும் வளைவுகளில் சிறப்பாக திரும்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள ஜாவா 42 எஃப்ஜே 334 சி.சி. பேரரல் ஒற்றை இன்ஜின் கொண்டதாகவும், 28.7 குதிரைத்திறன்(பி.எச்.பி.) கொண்டதாகவும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

ஒற்றை எக்ஸாஸ்ட்டுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஜாவா 42 எஃப்ஜே புதிய வண்ணங்களில் வெளியாகவுள்ளது. குறைந்த அம்சங்களும் குறைந்த விலையும் உடைய தற்போதைய ஜாவா 42 எஃப்ஜே எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 2 லட்சம் ஆகும்.

இதையும் படிக்க: ஹைஃபையான சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT