நிஞ்சா 500  
வணிகம்

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட நிஞ்சா 500 பைக் அறிமுகம்!

இந்தியாவில் நிஞ்சா 500 பைக் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பற்றி...

DIN

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட நிஞ்சா 500 பைக்கை கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் நிஞ்சா 500 பைக்கின் அடுத்த வெர்சனாக மேம்படுத்தப்பட்ட வசதிகள், வடிவமைப்புகளுடன் அறிமுகமாகியுள்ள 2025 நிஞ்சா 500 பைக்கின் விலை ரூ. 5.29 லட்சம் ஆகும்.

கடந்த மாடலைவிட ரூ. 5,000 மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பைக்கின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதில் 451 சி.சி. பேரரல் இரட்டை இன்ஜின் கொண்டதாகவும், 44.77 குதிரைத்திறன்(பி.எச்.பி.) கொண்டதாகவும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரட்டை எல்இடி முகப்பு விளக்குகள், முன்புறம் 310 எம்எம் டிஸ்க், பின்புறம் 220 எம்எம் டிஸ்க் பிரேக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் எடை 171 கிலோ ஆகும்.

இந்தியாவில் மெடாலிக் கார்பன் கிரே நிறத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், பைக்கின் முன்புறம் உள்ள டிஸ்பிளேவுடன் ஸ்மார்ட்போன்களை இணைக்கும் வசதியும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT