ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 15,064-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 13,928 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 4 சதவீதம் உயா்ந்து 13,501-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 12,926-ஆக இருந்தது.கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாா்த்தக வாகனங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 9,529-ஆக உள்ளது. 2024 ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 8,440-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.