மும்பை: வரி விதிப்பு தொடர்பான கவலைகள் மற்றும் தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தன.
தொடக்க வர்த்தகத்தில், 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் 111.17 புள்ளிகள் சரிந்து 81,074.41 புள்ளிகளாக வர்த்தகமானது. நிஃப்டி 33.45 புள்ளிகள் சரிந்து 24,734.90 புள்ளிகளாக இருந்தது.
பலவீனமான உலகளாவிய குறிப்புகளுடன் தொடங்கிய பிறகு சற்றே மீண்டது இந்திய பங்குச் சந்தை. இருப்பினும், மத்திய நேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப முன்பதிவு செய்த பிறகும், தொடர்ந்து நீடித்த விற்பனையால் நிஃப்டி 24,550க்குக் கீழே இழுத்து சென்றது.
முடிவில், சென்செக்ஸ் 585.67 புள்ளிகள் சரிந்து 80,599.91 ஆகவும், நிஃப்டி 203 புள்ளிகள் சரிந்து 24,565.35 ஆகவும் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.3 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.6 சதவிகிதமும் சரிந்தன.
உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு வாஷிங்டன் விதிக்கும் பல்வேறு வரிகளை பட்டியலிடும் நிர்வாக உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்ததால், இந்தியா அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதிகளில் 25 சதவிகித வரிகளை எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 2025 வரை முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவிகிதம் சரிந்து ரூ.2,279 கோடியாக உள்ளதாக நிறுவனம் அறிவித்ததையடுத்து, சன் பார்மா பங்குகள் 5 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்த நிலையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மாருதி ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டாடா ஸ்டீல், சிப்லா ஆகியவை சரிந்தும் அதே நேரத்தில் டிரென்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், எச்.யு.எல், நெஸ்லே ஆகியவை உயரந்து முடிந்தன. எஃப்.எம்.சி.ஜி தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தன. ஆட்டோ, ரியாலிட்டி, பார்மா, ஐடி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கி ஆகிய பங்குகள் 2 சதவிகிதம் வரை சரிந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், முதல் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு மாருதி சுசுகி பங்குகள் 2% க்கும் அதிகமாக சரிந்த நிலையில், ஜூன் வரையான காலாண்டு முடிவையடுத்து ஸ்விக்கி பங்குகள் 3% சரிந்தன.
நியூலாண்ட் லேப்ஸின் முதல் காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 85% சரிந்ததையடுத்து அதன் பங்குகள் 3 சதவிகிதம் சரிந்தன.
ப்ராக்டர் கேம்பிள் ஹெல்த், ராடிகோ கைதன், ஸ்டார் சிமென்ட், ஹிட்டாச்சி எனர்ஜி, இ-க்ளெர்க்ஸ் சர்வீசஸ், ஜேகே சிமென்ட், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், போஷ், ஆம்பர் எண்டர்பிரைசஸ், சாலட் ஹோட்டல்கள், மகாராஷ்டிரா ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.5,588.91 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
ஜூலை மாதத்தில் நிஃப்டி 3.1 சதவிகிதம் சரிந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பலவீனமான குறிப்பில் தொடங்கியது. மாற்றியமைக்கப்பட்ட கட்டண விகிதங்கள் செயல்படுத்தப்படும் தேதி ஆகஸ்ட் 7 என்பதால், இது நாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி கட்டணங்களைக் குறைக்க நேரிடும்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்த வர்த்தகமானது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் சரிந்து முடிவடைந்தன.
டிரம்பின் கட்டண உயர்வு, ஃபெட் ரிசர்வ் சமிக்ஞை, (Q1) - மென்மையான காலாண்டு வருவாய், எஃப்ஐஐ விற்பனை மற்றும் மோசமடைந்து வரும் தொழில்நுட்ப அமைப்பால் பங்குச் சந்தை சரிவுக்கு இது பல்வேறு வழிகளில் வழிவகுத்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.97 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 72.53 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.