பங்குச் சந்தை  கோப்புப் படம்
வணிகம்

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

சென்செக்ஸ் 1,068.74 புள்ளிகள் சரிந்து 82,225.92 புள்ளிகளாகவும், நிஃப்டி 288.35 புள்ளிகள் சரிந்து 25,424.65 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ஏஐ தாக்கத்தால் ஏற்படும் தொழில்நுட்ப பங்குகளில் பலவீனத்தின் போக்கு தொடரும் நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கிட்டத்தட்ட 1 சதவீதம் வரை சரிந்தன.

ஏஐ குறித்த இடையூறுகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் பிடியில் ஐடி பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்ததால் சரிந்து முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய வரிவிதிப்புக் கருத்துக்களுக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய வர்த்தகம் குறித்த கவலைகள் உள்ளிட்டவை முதலீட்டாளர்களை வெகுவாக பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், சென்செக்ஸ் 813.13 புள்ளிகள் சரிந்து 82,481.53 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,068.74 புள்ளிகள் சரிந்து 82,225.92 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 288.35 புள்ளிகள் சரிந்து 25,424.65 ஆக நிலைபெற்றது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தெரிவிக்க உள்ள செய்தியை அடுத்து, உலகளவில் உள்ள பங்குச் சந்தை வர்த்தகர்களால் இது உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சென்செக்ஸில் இன்று அதிகபட்சமாக எடர்னல் பங்குகள் 3.82 சதவீதம் சரிந்தன. அதைத் தொடர்ந்து எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், டிரென்ட், அதானி போர்ட்ஸ், ஐடிசி மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. மறுபுறம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் டெக் மஹிந்திரா, எடர்னல், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் சரிந்த நிலையில் எச்யுஎல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

துறைவாரியாக ஐடி குறியீடு 4 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. இருப்பினும் உலோகம், மருந்து, பொதுத்துறை வங்கி, எண்ணெய் & எரிவாயு, எரிசக்தி உள்ளிட்ட பங்குகள் 0.3 முதல் 1% வரை உயர்ந்தன.

அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கட்டண மாற்றங்கள் மற்றும் ஒப்பந்தங்களிலிருந்து பின்வாங்கும் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கையின் பின்னணியில், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.3,483.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,292.24 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஜப்பான் நிக்கி 225 உள்ளிட்டவை உயர்ந்தன. அதே நேரத்தில் ஹாங்காங் ஹாங் செங் சரிந்தன. அமெரிக்க பங்குச் சந்தை நேற்று கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை சரிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ஒன்றுக்கு 1 சதவீதம் உயர்ந்து $72.13 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

SCROLL FOR NEXT