வணிகம்

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

பிசி ஜூவல்லர்ஸ் கடந்த நான்கு மாதங்களில் அதன் நிகர கடனை 19 சதவிகிதம் குறைத்து ரூ.1,445 கோடியாகக் உள்ளதாக தெரிவித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பிசி ஜூவல்லர்ஸ் கடந்த நான்கு மாதங்களில் அதன் நிகர கடனை 19 சதவிகிதம் குறைத்து ரூ.1,445 கோடியாகக் உள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று அதன் நிர்வாக இயக்குநர் பல்ராம் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியை சேர்ந்த பிசி ஜுவல்லர்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் 52 ஷோரூம்களைக் கொண்டுள்ளதாகவும் அவற்றில் 49 நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்றது. இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.335 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டின் தொடக்கத்தில் ரூ.1,780 கோடியாக இருந்த நிகரக் கடன் ஜூலை மாத இறுதியில் ரூ.1445 கோடியாகக் குறைந்துள்ளது.

பிசி ஜுவல்லர் நிறுவனம் தனது நிதி நிறுவனங்களுடனான தீர்வு ஒப்பந்தத்தின்படி, 2024-25 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை 50 சதவிகிதத்திற்கும் மேலாகக் குறைத்துள்ளதாகக் தெரிவித்தது. முந்தைய நிதியாண்டின் இறுதியில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் 8.7 சதவிகிதமாகவும், ஜூலை 2025ல் 10.1 சதவிகிதமாகவும் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் அதன் மொத்த வருமானம் ரூ.807.88 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு இது ரூ.439.78 கோடியாக இருந்தது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.161.93 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், வரிக்கு முந்தைய லாபம் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் ரூ.84.64 கோடியிலிருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து ரூ.163.58 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ.71.39 கோடி வரி திரும்பப் பெற்றதால் அதன் நிகர லாபம் அதிகரித்தது என்றது.

2024-25 நிதியாண்டில், நிறுவனம் ரூ.577.70 கோடி நிகர லாபத்தையும், ரூ.2,371.87 கோடி மொத்த வருமானத்தையும் ஈட்டியுள்ளது.

இதையும் படிக்க: சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

PC Jeweller on track to be debt-free by next March

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT