ஆதித்யா பிர்லா கேபிடல் 
வணிகம்

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றது.

இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு அதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.759 கோடியாக இருந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.9,531 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.8,719 கோடியாக இருந்தது.

மொத்த செலவுகளும் காலாண்டில் ரூ.8,460 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே நிதியாண்டு 2025ல் ரூ.7,756 கோடியாக இருந்தது.

நிறுவனமானது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வணிகம், வீட்டுவசதி நிதி, சொத்து மேலாண்மை, ஆயுள் மற்றும் பொது காப்பீடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்க: பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

முற்போக்கான சீர்திருத்தம்! புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

குரோவ் Q2 லாபம் 12% உயர்வு; வருவாய் சரிவு!

அறிகுறியே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகம்! செய்ய வேண்டியது என்ன? மருத்துவர் அறிவுரைகள்! | kidney

SCROLL FOR NEXT