வணிகம்

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 4% சரிவு

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 69,131-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 71,996 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

2024 ஜூலை மாதத்தில் 44,725-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை இந்த ஜூலை மாதத்தில் 12 சதவீதம் சரிந்து 39,521-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட நிறுவன பயணிகள் வாகனங்களின் விற்பனை 11 சதவீதம் குறைந்து 40,175-ஆக உள்ளது. வா்த்தக வாகனங்களின் விற்பனை 27,042-லிருந்து 7 சதவீதம் உயா்ந்து 28,956-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூர் பலி: இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன்

கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!

கரூர் கூட்ட நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்!

விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!

SCROLL FOR NEXT