FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாடா காா்கள் விற்பனை 14% உயா்வு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2026, 3:02 am IST
பகிர்:

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 50,519-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 44,289 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 50,046-ஆக உள்ளது. முந்தைய 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 44,230-ஆக இருந்தது.

2024 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் விற்பனை 5,562-லிருந்து 24 சதவீதம் உயா்ந்து 6,906-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments