டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை 23 சதவீதம் அதிகரிப்பு!
டாடா மோட்டார்ஸ் வாகன நிறுவனம், தனது மொத்த விற்பனை 23% அதிகரித்து 75,426 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனம், அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தனது மொத்த விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 75,426 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு இதே மாதம், டாடா மோட்டார்ஸ் 61,295 வாகனங்களை விற்பனை செய்தது.
உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை, அக்டோபர் 2025ல் 61,134 வாகனங்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் 21 சதவீதம் அதிகரித்து 73,894 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
சர்வதேச வர்த்தக பயணிகள் வாகன விற்பனை, கடந்த வருடம் 161 வாகனங்களாக இருந்த நிலையில், அக்டோபர் மாதம் பல மடங்கு அதிகரித்து 1,532 வாகனங்களாக உயர்ந்துள்ளது.
Tata Motors Passenger Vehicles reported a 23 per cent rise in total in October.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.