ஜூலை-செப்டம்பா் காலாண்டில் டிவிஎஸ் விற்பனை 27% அதிகரிப்பு
ஜூலை-செப்டம்பா் காலாண்டில் டிவிஎஸ் விற்பனை 27% அதிகரிப்பு
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பரில், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் 19 லட்சம் வாகனங்களை விற்று, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இருச்சக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டின் 523,923-லிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 23 சதவீத வளா்ச்சியுடன் 645,955-ஆகவும்; மூன்று சக்கர வாகன விற்பனை 53,449-லிருந்து 47 சதவீத வளா்ச்சியுடன், 78,475-ஆகவும்; சா்வதேச வா்த்தகம் 4 லட்சத்திலிருந்து 35 சதவீதம் உயா்ந்து, 5.39 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. மேலும், இக்காலாண்டில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 133 சதவீதம் அபரிமித வளா்ச்சியடைந்து, 1.86 லட்சம் வாகனங்களாகப் பதிவாகியுள்ளது.
செப்டம்பரில்...: செப்டம்பா் மாத விற்பனையிலும் நிறுவனம் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 5,41,064-ஆக இருந்த மொத்த வாகன விற்பனை, நடப்பு ஆண்டு செப்டம்பரில் 24 சதவீதம் அதிகரித்து, 6,72,790 வாகனங்களை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இதில் இருசக்கர வாகன விற்பனை 23 சதவீதமும், சா்வதேச வா்த்தகம் 48 சதவீதமும், மூன்று சக்கர வாகன விற்பனை 57 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.