FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23% அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியை எட்டியது!

நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது குறித்து...

18 வினாடிகள் முன்பு
ஜிஎஸ்டி வசூல் - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது. உள்நாட்டு விற்பனை மூலமான ஜிஎஸ்டி வசூல் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 1.59 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலமான வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ. 72,246 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், அக்டோபரில் இரண்டாவது அதிகபட்ச வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசுத் தரவுகளின்படி, உள்நாட்டு நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைத்த வலுவான வருவாயால், அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.31 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த அக்டோபரில் ரூ.2,31,290 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

உள்நாட்டு விற்பனை மூலமான மொத்த ஜிஎஸ்டி வசூல் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 1.59 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலமான வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ. 72,246 கோடியாக உயர்ந்துள்ளது.

மொத்த வருவாய் ரூ. 2.31 லட்சம் கோடி வசூலில், மத்திய ஜிஎஸ்டி ரூ. 42,935 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ. 51,340 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 1.37 லட்சம் கோடிக்கு மேல் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி திரும்பப் பெறுதல் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6.5 சதவீதம் அதிகரித்து, ரூ. 27,934 கோடியாக உள்ளது. திரும்பச் செலுத்தப்பட்ட தொகைகளைச் சரிசெய்த பிறகு, அக்டோபர் மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.03 லட்சம் கோடியாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.2 சதவீதம் அதிகரித்து, ரூ. 14.77 லட்சம் கோடியாகவும், நிகர வசூல் 13 சதவீதம் அதிகரித்து, ரூ. 12.69 லட்சம் கோடியாக உள்ளது.

2017-இல் ஜிஎஸ்டி அமலானதில் இருந்து இதுவரை இல்லாத அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கப் பெற்றது. இரண்டாவது அதிகபட்சமாக அக்டோபரில் ரூ.2.31 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

கடந்த செப்டம்பரில் ரூ.2.03 லட்சம் கோடியும், கடந்த ஜூலையில் ரூ.2.11 லட்சம் கோடியும் கிடைக்கப் பெற்றது. நடப்பு நிதியாண்டில் 4-ஆவது முறையாக ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.

Gross GST Collections Increase 23% To Rs 2.31 Lakh Crore In October Goods and Services Tax (GST) refunds increased 6.5 per cent year-on-year to Rs 27,934 crore in October.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments