கோப்புப் படம் 
வணிகம்

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்கிகளின் கடன் தள்ளுபடி ரூ.91,260 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய நிதியாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்திரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இதுவே 2020-21 ஆம் ஆண்டில் வாராக் கடன் ரூ.1.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. அடுத்த ஆண்டில் இது ரூ.1.16 லட்சம் கோடியாகவும், 2022-23ஆம் ஆண்டில் இது ரூ.1.27 லட்சம் கோடியாகவும் குறைந்தது.

அதே வேளையில் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.1.65 லட்சம் கோடியை வசூலித்துள்ளன. இதுவே முந்தைய ஐந்து நிதியாண்டுகளில் மொத்த தள்ளுபடியில் இந்த மீட்பு 28 சதவிகிதமாகும்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சௌத்திரி, 2024-25 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கி வழங்கிய தற்காலிக தரவுகளின் அடிப்படையில் SARFAESI சட்டத்தின் கீழ் 2,15,709 வழக்குகளில் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ரூ.32,466 கோடியை மீட்டெடுத்துள்ளன என்றார்.

இதையும் படிக்க: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

SCROLL FOR NEXT