நேற்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில் இன்று(ஆக. 13) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,492.17 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 196.88 புள்ளிகள் அதிகரித்து 80,432.48 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93.00 புள்ளிகள் உயர்ந்து 24,580.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போலோ மருத்துவமனை, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி லைஃப், எடர்னல் ஆகியவை நிஃப்டியில் முக்கிய லாபத்தைப் பெற்றன. அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
எப்எம்சிஜி தவிர மற்ற அனைத்துத் துறைக் குறியீடுகளும் உயர்ந்தன. ஆட்டோ, உலோகம், ரியல் எஸ்டேட், மருந்துகள் துறை 0.5-1 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% உயர்ந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.