முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:13 AM
கோப்புப் படம்
பகிர்:

பங்குச் சந்தைகள் நேற்று உயர்வுடன் வர்க்கமான நிலையில் இன்று(பிப். 4) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,252.06 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 157.31 புள்ளிகள் குறைந்து 83,581.82 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.30 புள்ளிகள் குறைந்து 25,706.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எடர்னல் ஆகியவை பெரும் சரிவைச் சந்தித்தன. அதேநேரத்தில் எம்&எம், டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐடிசி, என்டிபிசி, ஆர்ஐஎல், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.04 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.58 சதவீதமும் அதிகரித்தது.

நிஃப்டியில் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், எல்டிஐ மைண்ட்ரீ, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டிசிஎஸ், எம்ஃபாசிஸ், டெக் எம் ஆகிய நிறுவனங்களின் சரிவால் நிஃப்டி ஐ.டி குறியீடு 6 சதவீதம் வரை சரிந்தது. அது தவிர, நிஃப்டி ரியல் எஸ்டேட் 0.8 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

அதேநேரத்தில் நிஃப்டி ஆட்டோ, மெட்டல் குறியீடுகள் தலா 1 சதவீதத்திற்கும் மேல் லாபம் ஈட்டின, தனியார் வங்கி குறியீடு 0.5 சதவீதம் உயர்ந்தது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளான பிப். 1 பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்த நிலையில் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் நேற்று நல்ல லாபத்துடன் நிறைவு பெற்றன. தொடர்ந்து இன்று பங்குச்சந்தைகள் சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

summary

Stock Market Updates: Sensex, Nifty see-saw in trade; Nifty IT drops 6 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.