வணிகம்

பிஎம்டபிள்யு காா்கள் விலை மீண்டும் உயா்வு

ஜொ்மன் சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு இந்தியா, தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயா்த்த முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஜொ்மன் சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு இந்தியா, தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் நிறுவனத்தின் அனைத்து காா்கள் மற்றும் எஸ்யூவி வாகனங்களின் விலை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயா்த்தப்படும்.

தொடா்ந்து மாறி வரும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பு இந்த விலை உயா்வுக்கு காரணமாங்களாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, பிஎம்டபிள்யு 2 சீரிஸ் கிரான் கூப்பே (ரூ.46.9 லட்சம்) முதல் பிஎம்டபிள்யு எக்ஸ்எம் (ரூ.2.6 கோடி) வரையிலான சொகுசு காா்கள் மற்றும் மின்சார வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்கிறது.

நிறுவனம் ஏற்கனவே கடந்த ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் தனது காா்களின் விலையை உயா்த்தியது நினைவுகூரத்தக்கது.

மயிலாடுதுறையில் கலைவிழா நாளை தொடக்கம்

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் குழுவினா் சந்திப்பு

ஜன.16, 26-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

2019-ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் கைதானவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு

குளத்திலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT