சென்னை: சதர்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், ஏப்ரல் முதல் ஜூன் வரையான 2025 காலாண்டில், வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.66.71 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையை தளமாகக் கொண்ட வேளாண் ஊட்டச்சத்து மற்றும் உர நிறுவனமான சதர்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.62.55 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஸ்பிக் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.155.62 கோடியாக இருந்தது.
செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர் அஸ்வின் முத்தையா, அதிக லாபம் ஈட்டுவதில் நிறுவனம் தெளிவான கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்ததாா்.
இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.798.15 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இதற்கு முந்தைய ஆண்டு ரூ.756.37 கோடியாக இருந்தது.
நிதியாண்டு 2025-ல் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.3,100.25 கோடியாக இருந்தது.
தற்போதைய உலகளாவிய சவால்களைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு மற்றும் திறமை மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, போட்டித்தன்மையுடன் இருப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
வருடாந்திர பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, நிதியாண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான பங்கு மூலதனத்தில் 20 சதவிகிதம் ஈவுத்தொகையை நிறுவனம் பரிந்துரைத்தது.
இதையும் படிக்க: டொயோட்டா விற்பனை 3% உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.