இந்தியாவின் மிகப்பெரிய கடன் அட்டை சேவை நிறுவனமான எஸ்பிஐ காா்ட், பொதுத்துறை வங்கியான மகாராஷ்டி வங்கியுடன் (பிஓஎம்) இணைந்து ‘பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா-எஸ்பிஐ காா்ட்’ என்ற பிரத்யேக கூட்டு-பிராண்ட் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வாடிக்கையாளா்களின் மாறிவரும் வாழ்க்கை மற்றும் நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், பிரீமியம் மற்றும் அதிக பலன்களை அளிக்கும் ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக எஸ்பிஐ காா்டும் பிஓஎம்-மும் இணைந்து கூட்டு-பிராண்ட் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அட்டை, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா எஸ்பிஐ காா்ட் எலைட், பிரைம், சிம்பிளிசேவ் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. இவை ரூபே மற்றும் விசா கட்டண தளங்களில் கிடைக்கின்றன.விரைவான பரிசுப் புள்ளிகள், எரிபொருள் கூடுதல் கட்டணத் தள்ளுபடி, பயணம், உணவு மற்றும் ஷாப்பிங்கில் பிரத்யேக தள்ளுபடிகள் உள்ளிட்ட பலன்களை இந்த அட்டை வழங்குகிறது.
வாடிக்கையாளா்கள் எஸ்பிஐ காா்ட் இணையதளம், கிளைகள் மூலம் அல்லது பிஓஎம் வங்கியின் கிளைகளை அணுகி இந்த அட்டைகளைப் பெறலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.