புதுதில்லி: சிறப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஜெம் அரோமாடிக்ஸ் லிமிடெட், தனது பங்கு விற்பனையின் முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையிலிருந்து நிதி திரட்ட 97,82,363 பங்குகளை, ஒவ்வொன்றும் ரூ. 2 முகமதிப்புடன் வெளியிட திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 46 பங்குகளுக்கும் அவற்றின் மடங்குகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்படும்.
ஆரம்ப பங்கு விற்பனையில் 97,82,363 பங்குகளுக்கு நிகரான 1,00,64,616 விண்ணப்பங்களை பெற்று 1.03 மடங்கு முறை அதிக அளவு சந்தா பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
சில்லறை முதலீட்டாளர்களிடமிருந்து 1.08 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில், தகுதிவாய்ந்த நிறுவனத்திடமிருந்து 1.05 மடங்கு சந்தா பெற்றது.
அதே வேளையில் நிறுவனம் சாரா முதலீட்டாளர்களிடமிருந்து 88 சதவிகிதம் சந்தாவைப் பெற்ற நிலையில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.135 கோடிக்கு மேல் திரட்டியது.
ரூ.451 கோடி அளவு கொண்ட ஜெம் அரோமாடிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று முடிவடையும். ஒரு பங்கின் விலை ரூ.309 முதல் ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஓ வெளியிட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை நிறுவனம் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
மார்ச் 31, 2025 மற்றும் மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் ஜெம் அரோமாடிக்ஸ் லிமிடெட்டின் வருவாய் 11% அதிகரித்துள்ளது மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் 7% அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனமானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் குஜராத்தில் இயங்கி வருகிறது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.