வணிகம்

ஹூண்டாய் விற்பனை 7% குறைவு

தினமணி செய்திச் சேவை

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 7 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 60,073-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 64,563-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 10 சதவீதத்திற்கு மேல் குறைந்து 43,973-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 49,013-ஆக இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் நிறுவன வாகனங்களின் ஏற்றுமதி 15,550-லிருந்து 16,100-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

மனகவலை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT