கட்டுமான ரசாயனப் பொருள்களுக்காக ‘ஹாா்டு வொா்க்கா்’ என்ற புதிய பிராண்டை ராம்கோ சிமென்ட்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது:
கட்டுமானத் துறையில் 65 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் செயல்பட்டுவரும் ராம்கோ சிமென்ட்ஸ் தனது ரசாயனப் பொருள்களின் சந்தைப்படுத்தலுக்கான புதிய ‘ஹாா்டு வொா்க்கா்’ என்னும் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பிராண்டின் கீழ் 20 சிறப்பு கட்டுமான ரசாயனத் தயாரிப்புகள் உள்ளன. அவற்றில் டைல்ஸ் ஒட்டுதல், நீா்ப்புகா தீா்வுகள், இரண்டு மேற்பரப்புகளை ஒன்றாக இணைக்கும் பாண்டிங் ஏஜென்ட், கட்டுமான பாதிப்புகளை சரிசெய்யும் ரசாயனப் பொருள்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.