சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆன்லைனில் தற்போது அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் ரூ.1,29,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்24 தற்போது ஃபிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. தற்போது இதன் விலை ரூ. 80,749 ஆக குறைந்துள்ளது.
ஃபிளிப்கார்டில் சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி தற்போது ரூ.49,250 தள்ளுபடி விலையில் ரூ. 81,499-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய விலைக் குறைப்பாகும். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி ஃபிளிப்கார்ட் டெபிட் கார்டில் 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது ரூ.750 வரை சேமிப்பை வழங்குகிறது. இதன் மூலம் இதன் விலை ரூ. 80,749 ஆகக் குறைந்துள்ளது.
சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா சிறப்பம்சங்கள் என்னென்ன?
டைட்டானியம் ஃப்ரேமுடன் கொரில்லா கிளாஸ் ஆர்மரால் பாதுகாக்கப்பட்டுள்ளது. 6.8 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட கண்ணாடி பிரதிபலிப்புகளை 75 சதவீதம் குறைத்து சூரிய ஒளியிலும் திரையை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா, 50 டெகாபிக்சல் 5எக்ஸ் டெலிஃபோட்டோ, 10 மெகாபிக்சல் 3எக்ஸ் டெலிஃபோட்டோ மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் ஆகியவை உள்ளன. 45W வேகமான சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 mAh பேட்டரி ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.