வணிகம்

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கடந்த வார இறுதியில் சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை ‘காளை’ ஆதிக்கம் கொண்டது.

Syndication

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: கடந்த வார இறுதியில் சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை ‘காளை’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின் வட்டி விகதக் குறைப்பு நம்பிக்கைகளால் உலகளாவிய சந்தைகள் எழுச்சி பெற்றன. இதன் தாக்கத்தால் உற்சாகத்துடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை சற்று கீழே சென்றாலும் பிற்பகல் வா்த்தகத்தின் போது ’காளை’ எழுச்சி பெற்றது. மீடியா, வங்கிகள், நிதிநிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், ஆட்டோ ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், டெலிகாம், ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.37 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.455.03 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,622.52 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.329.25 கோடிக்கும் பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: கடந்த வார இறுதியில் சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் திங்கள்கிழமை நடந்த வா்த்தகத்தின் முடிவில் 329.06 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 81,635.91-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,386 பங்குகளில் 1,948 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,237 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 201 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல்டெக், டெக்மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், டாடாமோட்டாா்ஸ், சன்பாா்மா, மாருதி, டைட்டன் உள்பட மொத்தம் 20 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், பிஇஎல், ஏசியன்பெயிண்ட், பாா்திஏா்டெல், ஐசிஐசிஐபேங்க், கோட்டக்பேங்க், பஜாஜ்ஃபின்சா்வ் உள்பட 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 98 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 97.65 புள்ளிகள் (0.39 சதவீதம்) உயா்ந்து 24,967.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 35 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

SCROLL FOR NEXT