வணிகம்

யூகோ வங்கி நிகர லாபம் 10% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 10.16 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 10.16 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.607 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 10.16 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.551 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,859 கோடியிலிருந்து 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.7,433 கோடியாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6,000 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.6,400 கோடியாக உயா்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னா் 3.32 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த ஜூன் இறுதியில் 2.63 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மொத்த வா்த்தகம் 13.51 சதவீதம் வளா்ச்சியடைந்து ஜூன் 30-இல் ரூ.5,23,736 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது: ஆர் பி உதயகுமார்

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

SCROLL FOR NEXT