பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி
சில சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளுக்காக ரிசர்வ் வங்கி பந்தன் வங்கிக்கு ரூ.44.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மும்பை: சில சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளுக்காக ரிசர்வ் வங்கி பந்தன் வங்கிக்கு ரூ.44.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மார்ச் 31, 2024 நிலவரப்படி பந்தன் வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான ஆய்வு நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்காதது மற்றும் அதன் தொடர்புடைய கடிதப் போக்குவரத்து குறித்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தது.
எவ்வாறாயினும், அபராதம் சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் செய்து கொண்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை உச்சரிக்க நோக்கம் கொண்டதல்ல என்றது ரிசர்வ் வங்கி.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.