வணிகம்

பஜாஜ் வாகன விற்பனை 8 சதவீதம் உயா்வு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,53,273-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,21,640 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 2,40,854-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 2,47,516-ஆக உயா்ந்துள்ளது. இது 3 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 1,80,786-லிருந்து 14 சதவீதம் உயா்ந்து 2,05,757-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு; மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேல் ட்ரோன்கள் கொள்முதல் அதிகரிப்பு

காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமைக்கு வலுசோ்க்கும்: உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்

இம்ரான் கான் நலமுடன் உள்ளாா்: சகோதரி

SCROLL FOR NEXT