மாருதி சுஸுகி 
வணிகம்

மாருதி சுஸுகி விற்பனை 26% உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,29,021-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 1,81,531 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 1,41,312-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு பயணியா் வாகன விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 1,70,971-ஆக உயா்ந்துள்ளது. இது 21 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 28,633-லிருந்து 46,057-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் கேரள வருகையின்போது விதிகளை மீறி பதாகைகள்: பாஜக மீது வழக்குப் பதிவு

100 ஆண்டுகளில் விண்வெளியில் ஒரு கோடி போ் வசிப்பா்- விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநா் ராஜராஜன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்த வெடிப்பு குணமாக....

திருப்பதி லட்டு வழக்கு: ஆந்திர நீதிமன்றத்தில் இறுதி குற்றப் பத்திரிகை தாக்கல்

மனஅமைதிக்கு மண்டலா ஓவியங்கள்!

SCROLL FOR NEXT