புதுதில்லி: நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நாட்டில் மொபைல் போன் இறக்குமதி 2024-25 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தேவை 0.02% குறைந்துள்ளது. இதுவே 10 ஆண்டுகளுக்கு முன்பு 75% இருந்தது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மின்னணுப் பொருட்களின் உற்பத்தி 2014-15 ஆம் ஆண்டில் 1.9 லட்சம் கோடியிலிருந்து கடந்த ஆண்டில் ரூ.11.3 லட்சம் கோடியாக, அதாவது 6 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆத்ம நிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, மின்னணு உற்பத்திக்கான முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு பிறகு முறையான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரசாதா தெரிவித்தார்.
2014-15ல் சுமார் ரூ.18,000 கோடியாக இருந்த மொபைல் போன் உற்பத்தி, தற்போது 28 மடங்கு அதிகரித்து ரூ.5.5 லட்சம் கோடியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2014-15ல் ஆண்டில் 0.01 லட்சம் கோடியாக இருந்த மொபைல் போன் ஏற்றுமதி, கடந்த ஆண்டு (2024-25) 127 மடங்கு அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட கைபேசிகளைச் சார்ந்திருப்பது அதே காலகட்டத்தில் 75 சதவிகிதத்திலிருந்து 0.02 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றார்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.